ராமேசுவரத்தில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகள் அஞ்சலி செலுத்தி வரு கின்றனர். அப்துல் கலாமுக்கு  பாம்பன் பாலம் அருகில் சிலை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



மக்களின் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கடந்த மாதம் 27-ந்தேதி  மேகாலயா மற்றும் ஷில்லாங் கில் நடந்த ஒரு கருத்தரங்கில் மாணவர்களிடையே பேசி கொண்டிந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந் தார்.

அப்துல் கலாம் இறந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அவரது உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

குடும்பத்தினரின் விருப்பப்படி அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்கரும்பில் கடந்த 30-ந்தேதி  நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மத்திய-மாநில அமைச்சர்கள், தமிழக கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்று ராமேசுவரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இன்றுடன் 9-ம் நாள் ஆகிறது. தினமும் பொதுமக்க்ள, மாணவ-மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்துக்கு பொதுவாக நாள்தோறும் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட்டு விட்டு அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பேய்க்கரும்புக்கு வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் கலாமின் வீட்டை யும் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

அவரது வீட்டில் அமைக் கப்பட்டுள்ள கலாமின் சாதனை படக்கண்காட்சியையும் பார்த்து செல்கின்றனர். ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவிலை அடுத்து தற்போது கலாம் அடக்கம் செய்யப்ட்ட இடத்திற்கு அதிகமானோர் வந்து செல் கின்றனர்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிற்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித் தார்.அவர் மேலும் கூறுகையில், சென்னை கோல்டன் பிரண்ட்ஸ் அரிமா சங்கமும், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கமும் இணைந்து ராமநாதபுரம் - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் பாலம் அருகில் 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய  இரும்புச் சிலை வைக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம் பர் 26-ந்தேதி நடைபெறு கிறது. இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்த கவர்னர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள் கின்றனர். சிலை வடிமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வரு கிறது என்று தெரிவித்தார்.

Post a Comment

 
Top