ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார். இதை சரியாக சொல்வது கொஞ்சம் கடினம்தான். எந்தப் பெண்ணையும் நீ அசிங்கமாக இருக்கிறாய் என்று சொல்ல யாருக்குமே மனம் வராது. இருந்தாலும் ஒரு பெண் எந்த வயதில் அழகாக இருப்பார் என்பதை ஒரு டிவி சானல் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கணிப்புப் படி, 31 வயதில்தான் ஒரு பெண் அழகாக இருப்பதாக அதில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் தெரிவித்துள்ளனராம். இந்த வயதில்தான் பெண்கள் அழகாகவும், கவர்ச்சிகரமாகவும், பார்ப்பதற்கு பிடித்தமானவராகவும் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
இதைக் கண்டுபிடிப்பதற்காக 2000 ஆண் மற்றும் பெண்களிடம் கருத்து கேட்டுள்ளது க்யூவிசி என்ற ஷாப்பிங் தொடர்பான சேனல்.
முப்பது வயது தொடங்கும்போதுதான் ஒரு பெண் மேலும் அழகாகிறார், கவர்ச்சிகரமாக மாறுகிறார் என்பது கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களின் கருத்தாகும்.
மேலும், இந்த வயதில்தான் மிகவும் இளமையோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறார்கள். இதற்கு் காரணம், அவர்களிடம் அதிகரித்துள்ள தன்னம்பிக்கையே காரணமாக இருக்கும் என்பதும் இவர்களின் கருத்தாகும்.
30 முதல் 31 வயது வரையிலான பெண்கள்தான் மிகவும் ஸ்டைலாகவும், எழிலாகவும் இருக்கிறார்களாம். தோற்றப் பொலிவு மட்டுமல்லாமல் அவர்களது சிந்தனை, செயல்பாடு ஆகியவையும் கூட அழகாக மாறி விடுகிறது இந்த வயதில் என்பது கருத்துக் கணிப்பு முடிவு.
பெண்கள் 31 வயதில் தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருக்கிறார்கள் என்று 70 சதவீதம் பேரும், அழகான தோற்றத்துடன் இருப்பதாக 67 சதவீதம் பேரும், ஸ்டைலாக இருப்பதாக 47 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
வயது ஏற ஏறத்தான் பெண்களுக்கு அழகு கூடுகிறது என்று 63 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேசமயம், வயது ஏற ஏற பெண்களுக்கு அலட்சியப் போக்கு அதிகரித்து விடுவதாக இதே அளவிலான நபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல வயது ஏற ஏற பெண்கள் தங்களை மிகவும் பெருமையாக உணர்வதாக 51 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
இதேபோல இந்த வயதில் ஆண்கள், பெண்களை விட அதிகம் செலவழிக்கிறார்களாம்-தங்களை அழகுபடுத்திக்கொள்வதற்காக. ஜிம்முக்குப் போவதிலும், தலையலங்காரத்தை கவனமாக பார்த்துக் கொள்வதிலும் இந்த வயது ஆண்கள் அதிக சிரத்தை எடுக்கிறார்களாம்.
கருத்துக் கணிப்பை மேற்கொண்ட குழு இதுகுறித்துக் கூறுகையில், ஒரு பெண்ணின் அழகு என்பது அவருடைய புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக நம்பிக்கை, அழகு, ஸ்டைல் ஆகியவையும் இணைந்ததே என்பதை இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளது.dworldforum.com

Post a Comment

 
Top