பழமொழிகள்.....

* கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
* கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி
* கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
* கடல் திடலாகும், திடல் கடலாகும்.
* கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
* கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
* கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை
* கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
* கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
* கடுக்காய்க்கு அக நஞ்சு; இஞ்சிக்கு புற நஞ்சு
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
* கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.

Post a Comment

 
Top