விதியை நிர்ணயிப்பவர் பிரம்மா. இவரின் கையெழுத்தே நம் தலையெழுத்தானது. இதனை மாற்றும் வலிமை முருகனின் திருவடிகளுக்கு உண்டு என்கிறார் அருணகிரிநாதர். வேலுண்டு வினையில்லை என்று வேலின் சிறப்பை போற்றுவர். ஞானத்தின் அடையாளமாக வேல் திகழ்கிறது. கூர்மை மிக்க, ஆழ்ந்த, அகன்ற அறிவே வேலாயுதமாக முருகன் கையில் இருக்கிறது.
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள் மொய்மைகுன்றா
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணை பன்னிரு தோள்களும் பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.
உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிருகை
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே.
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன் பன்னிருகை
கோலப்பா வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே.
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்- நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.
மருகனே ஈசன் மகனே ஒருகை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்.
முருகக் கடவுளுக்குப் பிற்காலத்தில் ஆயிரம் பெயர்கள் கூட்டப் பட்டது. சண்முகன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், காங்கேயன் என்று அடுக்கிக் கொண்டு போனார்கள். ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக அத்தனை பெயர்களுக்கும் முதன்மையாய் நின்று வந்திருப்பது முருகன் என்ற தூய தமிழ்ப் பெயரே. அந்தப் பெயரைச் சொல்லி முருகனை வழிபடுதல் மிகச் சிறப்பு.
வேல் அறிவின் அடையாளம். மயில் ஓங்காரத்தின் அடையாளம். துன்பம் வரும் வேளையில் ஓங்கார வேலன் அறிவாக வந்து நமக்கு நல்ல சிந்தனையைத் தந்து காப்பாற்றுவான் என்பதால்தான் வேலும் மயிலும் துணை என்றார்கள்.
Post a Comment