யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

காதோரம் 
வாய் வச்சு
காதோட நீ பேசு
சத்தம் போட்டா 
வார்த்தை எல்லாம்
அவன் சிறையிலே 
சேத்திடிச்சு

எங்க போய் ஒழிஞ்சாலும்
ஏதோ ஒன்னு பாக்குது
யாரு கிட்ட பேசினாலும் 
ஏதோ ஒன்னு கேக்குது
அடிமையாக்க ஓங்கிருந்தா
அடிதடினு இறங்கலாம்
ஆசையத்தா காட்டி 
இப்போ
கால வாறி வெட்டுறான்

யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்துக் கொண்டு
பார்ப்பவன்
வான் கடல் 
மண்ணிலும் மனதிலும்
காதை வைத்துக் கொண்டு
கேட்ப்பவன்

வேசத்த இழந்தாச்சி 
வானம் பாத்து கைய கட்டு 
உத்தமன் தான் இல்லையின்னு 
வங்கியில வட்டி கட்டு 

எப்பெப்பயோ செஞ்சதெல்லாம் 
எங்கெங்கேயோ பதியுது 
கோட்ட விட்டு தோத்த பின்தான்
ஆட்டமே புரியுது

எங்கிருந்து அடிக்கிறானு 
தேடி பாக்கப் போயிதான்
உருவமெல்லாம் 
மிருகமாத்தான்
கற்ப்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்


கருவிய கையில
பிடிச்சி 
கனவு கூச்சம் 
காசயெல்லாம் பொதச்சி 
ரகசியம் பூட்டி தான் அடச்சி
யாருக்கும் தெரியாம மறச்சி

இலவச விளம்பரம்னு 
அதன் வசம் இழுத்துச்சு 
எல்லை இல்லா ஆசப்படுனு
கூச்சமில்லாம சொல்லிச்சு 
சாக்கு இப்போ இருக்குது 
சாவி இன்னும் பொருந்துது 
போட்டிருக்க பூட்டியிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையுது 
22 Dec 2018

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top