ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாம்டி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கினாரா வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை மனதில்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கல் அவை திசை மாறுமே

அவளின் கனவோ உள்ளே ஒளியும்
இரவும்  பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை அடையும்
எந்த காட்சியில் அது வார்த்தையாகிடும்

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கினாரா வேலையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை மனதில்

நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மனமே இல்லா இறைவன் நீயோ
வயதை கடியும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

Post a Comment

 
Top