நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

உன் போல நான் உயிரானதும் 
பெண் என்ற நான் தாயானதும்
பிறந்த பயனாய் உன்னை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

அம்மாவும் நீ அப்பாவும் நீ
அன்பால் என்னை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உன்னை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்

உன் மனதின் சாயலுள்ள
பெண் உருவைத் தேடினேன்
பழங்கனவைக் கானலிலே 

கண்கலங்க காண்கிறேன்
பழையபடி நினைவுகள் திரும்பிடும்
பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும்
நாள் வருமோ
திருநாள் வருமோ

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
என்னை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா
திருத்தலம்
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன் 
அனுதினம் உன்னை நினைந்திருக்கிறேன்

Post a Comment

 
Top