தமிழகத்தில் இடைத் தேர்தலா... பொதுத் தேர்தலா? தீர்மானிக்கும் வழக்கின் கதை!
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை, இதோ... இப்போதே கலைத்துவிடுவோம்; இரண்டு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது; பழனிசாமி அதில் தோற்று பஞ்சாமிர்தமாகிவிடுவார்; பன்னீர் செல்வம் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போவார்; அதன்பிறகு, ஆட்சியைப் பிடித்து, கட்சியைக் கைப்பற்றி, இரட்டை இலையை மீட்டு, அம்மாவின் ஆட்சியை நடத்துவேன்” என்று வாய்ஜாலம் காட்டினார் டி.டி.வி.தினகரன்!
ஆனால், இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. மாறாக, தினகரனை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ-க்கள் பதவியைப் பறிகொடுத்ததும், அந்த 18 பேரை தேர்ந்தெடுத்த பொது மக்கள், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வை இழந்ததும்தான் நடந்தது! இப்போதும், எடப்பாடி முதல்வர் நாற்காலியில் சின்ன அதிர்வுகூட இல்லாமல் அமர்ந்திருக்கிறார்; பன்னீர் பவ்யமாக துணை முதல்வர் நாற்காலியைப் பற்றிக்கொண்டார். ஆட்சியும் அவர்களிடம்தான் இருக்கிறது; அ.தி.மு.கவும் அவர்களிடம்தான் இருக்கிறது! இதில் சலசலப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்குக்கு மட்டுமே உண்டு. அந்த வழக்கும், இரண்டு தனி நீதிபதிகள், தலைமை நீதிபதி அமர்வு எனச் சுற்றி மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதியை மாற்றிய உச்ச நீதிமன்றம், அவருக்குப் பதில் இந்த வழக்கை, மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மேல், இந்த வழக்கை மேல்முறையீட்டுக்கு எடுத்துப்போவதில்லை என்று தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதால், நீதிபதி சத்யநாராயணா அமர்வோடு 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு ஒரு முடிவுக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி சத்யநாராயணா அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணை இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குச் சவாலாக விளங்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் கதை!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்!
அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் 19 பேர், `முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படுவோம்’ என்று சொல்லி தினகரனை ஆதரிக்க தொடங்கினர். அந்த 19 பேரும், 2017 ஆகஸ்ட் 22-ம் தேதி, கவர்னரிடம் தனி தனியாகக் கொடுத்த கடிதத்தில், `தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். கொறடா பரிந்துரை! 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி, அ.தி.மு.க சட்டமன்றத் தலைமை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம், ``கொறடா உத்தரவு இல்லாமல், முதல்வரை மாற்றச் சொல்லி கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பரிந்துரைத்தார். கொறடாவின் பரிந்துரையை ஏற்று, அன்றே சபாநாயகர் தனபால், 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
Post a Comment