இங்கிலாந்தில் கணிதம் புரிந்துகொள்ளும் ஆற்றல்கொண்ட விசித்திர நாய்க்குட்டி: வீடியோ….. Watch brainy Shih Tzu dog solve maths problems faster than a toddler

இங்கிலாந் :
என்றென்றும் செல்லமாக நாய்கள் வளர்க்கப்படுவதற்கு அதன் குறும்புகளும், மனிதரோடு அது ஒன்றிப்போகும் விதமும் காரணமாக இருக்கலாம்.
இங்கிலாந்தில் ஒரு செல்ல நாய்க்குட்டி பிறந்து சில மாதங்களிலேயே கிண்டல் செய்யும் ‘டங் அவுட்’ ஸ்மைலி போல தானாகவே அவ்வப்போது செய்துவந்தது. இதை கவனித்த அதன் உரிமையாளர் கட்டளையிட்டால் அவ்வாறு செய்யும்படி அதனை பழக்கினார்.
கணிதத்தை புரிந்துகொள்ளும் இந்த ஷிஹ் ட்சூ வகை நாய்க்குட்டி ஒரு நடக்கத்தெரிந்த குழந்தையை விட இயற்கையிலே புத்திசாலியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் புத்திசாலித்தனத்தை உணர்ந்த உரிமையாளர் தொலைக்காட்சியில் அது தோன்றவும் வழி செய்துள்ளார். வெறும் இரண்டு வயதே ஆகும் இந்த நாய்க்குட்டி 60 வித கட்டளைப்படி நடக்கவல்லது.
ஷிஹ் ட்சூவுக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய வைக்க மாட்டேன் என உரிமையாளர் தெரிவித்தார். இந்தியாவில் ஷிஹ் ட்சூக்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks: Maalai Malar( news)
Thanks: Youtube ( Video )

Post a Comment

 
Top