economy_dinin_tcmdworldforum.comஒரு பாட்டில் தண்ணீர் மற்றும் ஒரு பையில் சில நல்ல நொறுக்குத் தீனிகளை உங்கள் கைப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு குறைந்த நேரப் பயணமாக இருந்தாலும் பரவாயில்லை. சில விமான நிறுவனங்கள் இப்போதெல்லாம் உணவை அளிக்கின்றன என்றாலும் எதிர்பாராத தாமதங்கள் உங்களுடைய இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்துவிடும்.
விமானம் மேலெழும்போது அல்லது தரையிறங்கும்போது மிட்டாய், சோம்பு, சுயிங்கம் மெல்லவும், அல்லது அகலமாகக் கொட்டாவி விடவும். இது உங்கள் காதுகளின் மத்தியில் ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்யும்.
விமானப் பயணத்தின்போது ஆல்கஹாலைத் தவிர்க்கவும். விமானத்தில் உள்ள காற்று மிகவும் உலர்வாக இருக்கும். ஆல்கஹால் உங்கள் உடலில் உள்ள நீரை வற்றிப் போகச் செய்யும். காபினேட்டட் பானங்களும் இதையேதான் செய்யும்.
விமானப் பயணத்தின்போது உங்களுடைய காலணிகளைக் கழற்றுவதைத் தவிர்க்கவும். குறைந்த காற்றழுத்தம் காரணமாக உங்களுடைய பாதங்கள் வீங்கிப் போகலாம். நீங்கள் மறுபடியும் காலணியைப் போடுவதற்கு முயற்சி செய்யும்போது அசோகரியமாக உணரலாம்.
அடுக்குகளாக உடையணியவும். விமானங்கள் அடிக்கடி மிகவும் சூடாகவும் அல்லது மிகவும் குளிராகவும் இருக்கும். அடுக்குகளாக உடையணிவதன் மூலம் ஆடைகளைக் கூட்டியோ அல்லது குறைத்தோ உங்களுடைய உடல் வெப்பத்தைக் கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ளலாம்.
பயணிகள் டாய்லட் சீட்டுகள், சோப்பு வழங்குதல்கள், இருக்கையின் பின்புறங்கள், கை வைத்துக் கொள்ளும் தடுப்புகள், குறிப்பாக ட்ரே டேபிள்கள் ஆகியவற்றில் தொற்றிக் கொள்ளும் கிருமிகள் இருக்கும் என்பதால், இவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பயண சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
பயணத்தின்போது பயன்படுத்துவதற்காக உங்கள் பையில் கைகளைத் தூய்மையாக வைத்திருக்கும் மருந்துகளை வைத்துக் கொள்ளுங்கள்.

Post a Comment

 
Top