மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம். ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம். ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம்.dworldforum.com
மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. மற்றொரு பங்கு ஆண்களுக்கு ஏற்படுகிறது. கடைசி பங்கு ஆண் பெண் என இரண்டு பேருக்கும் தெரியாத காரணங்களால் ஏற்படுகிறது. இப்பொழுதெல்லாம் மலட்டுத் தன்மை பிரச்சனை பல பெண்களையும், ஆண்களையும் தாக்குகிறது. அதற்கு காரணம் நாம் வாழும் ஆரோக்கியமற்ற சூழலும், உணவும் என்று கூட சொல்லலாம்.
மலட்டுத் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளது. அதைப் பார்ப்போம்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். அது கர்ப்பம் தரிக்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தை பெற்றெடுக்க திட்டம் போட்டிருந்தால், இது முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நிதானமாக இருங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மேலும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.
மலட்டுத் தன்மை பெண்களிடம் இருந்தால், அதனை கண்டுபிடித்து குணப்படுத்துவது சுலபம். அதற்கு காரணம் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட அனைத்து காரணிகளும் பெரும்பாலும் அறியப்பட்டவை தான்.
எதை சாப்பிடுவதில்லை மற்றும் எதனை அதிகம் சாப்பிடுகிறோம் என்பதை கவனிக்க தொடங்குங்கள். கர்ப்பமாக உதவும் அனைத்து உணவுகளையும் உண்ணுங்கள். மேலும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் கருவளம் மேம்பட உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம்.
நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி பார்ட்டிக்கு சென்று தூக்கத்தை இழப்பவரா? கவனமாக இருங்கள். இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும். அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவையில் முக்கியமான ஒன்று தான் மலட்டுத் தன்மை. இது மலட்டுத் தன்மைக்கு உறுதுணையாக, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
மலட்டுத் தன்மையை நீக்க அதன் காரணத்தை முதலில் கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சைகளை முடிவு செய்ய வேண்டும். அதற்காக பல வல்லுனர்களின் அறிவுரையையும் பெற்றுக் கொள்ளலாம்.
பெரும்பாலும் நீக்குதல் வழிமுறையையே வல்லுனர்கள் பின்பற்றுவார்கள். கருமுட்டை வெளிப்படுதல் இயல்பாக உள்ளதா அல்லது நடப்பதே இல்லையா என்பதை கண்டறிவது தான் முதல் நடவடிக்கை. அதனை சோதிக்க கருமுட்டை வெளிப்படுதல் கருவியை கொண்டு உடல் வெப்ப நிலை மற்றும் சினையியக்குநீரின் அளவை பதிவு செய்து, இந்த பிரச்சனையை சோதித்து பார்ப்பார்கள். இது போக பல நிலை அல்ட்ரா ஒலி சோதனையும் நடத்தப்படும்.
ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை கண்டறிந்து, அதனை குணப்படுத்துவது என்பது கஷ்டமான ஒன்றாகும். விந்தணு எண்ணிக்கை, அதன் வீரியம் மற்றும் இதர கூறுகளை கண்டறிய விந்து மாதிரி ஆய்வக கூடத்தில் சோதனை செய்யப்படும். டெஸ்டோஸ்டிரோன் அளவை கண்டறிய ஹார்மோன் அளவுகளும் சோதனை செய்யப்படும். பிறப்புறுப்புகளில் கோளாறு, உடலுறவால் பரவும் வியாதிகள் (எஸ்.டீ.டி), பால்வினை நோய் (வீ.டி), பின்போக்கு விந்துதள்ளல் போன்ற வினையியல் பிரச்சனைகளும் சோதனை செய்யப்படும். இந்த முயற்சிகள் அனைத்தையும் எடுத்து, உங்கள் மனைவியை வெற்றிகரமாக கர்ப்பமாக்கி, உங்கள் குட்டி தேவதைக்கு இந்த உலகத்தை அறிமுகப்படுத்துங்கள்.
கணவன் மனைவி உறவுக்கு இடையே இறுக்கம் ஏற்பட்டாலும் கூட, மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக அது அமையும். அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் பரஸ்பர அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அவர்களுக்குள் சண்டையோ எந்த வித உரசலோ இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும். பொதுவாக பல உடல் வலிகளை அனுபவிக்க போவது மனைவி என்பதால், ஆண்களின் பொறுப்பு தான் கூடுகிறது. மலட்டுத் தன்மைக்காக ஐ.வி.எப். ப்ரெக்நென்சி சிகிச்சை எடுக்கும் போது பல சுற்றுக்கள் நடத்தப்படும். இதனால் பெண்கள் மீது அழுத்தம் போடப்படும்.
மலட்டுத் தன்மைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றால் ஒரு வித எரிச்சல் ஏற்படும். சில நேரம் அது ஏன் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாது. இதனால் இது மலட்டுத் தன்மையை பெரும்பாலும் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தும். மலட்டுத்தன்மை சிகிச்சைக்காக செல்லும் தம்பதிகளில் 10% பேர்களுக்கு மலட்டுத் தன்மைக்கான காரணம் என்னவென்று தெரிவதில்லை. இருப்பினும் மற்ற வியாதிகளை போல் இதையும் குணப்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment