சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். 
                  
மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.
சிறுநீரக கல் பிரச்சனைக்கு ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.
நோண்டி எடுக்கப்பட்ட வாழை >>> 
                              
இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.
அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.

நீர் நிரம்பிய நிலையில் வாழை >>> 
            

அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.
இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்க வேண்டும்.
சிறுநீரக கல் பிரச்சனை முற்றிலுமாக குணமாகும் .................!!!!!!!!!!!!!!!!

Post a Comment

  1. It is really wonderful. Why I say so is very simple. I had this problem for more than three times. Every time I experienced intolerable pain in the lower abdomen ( Right/left side). There was no necessity to confirm the presence of stone (either in kidney or ureter/bladder). Obviously to know the size of the stone Doctors advice CT scan/KUB x-ray or Ultra sound abdominal scan. After knowing the size of the calculi(stone) doctors will advocate surgery mostly which is costly. Unable to bear the pain people will opt for surgery. Such will be the pain. The suggested therapy by our friend is good. But where to go for the plantain tree is the problem. However the plantain juice is also supposed to give remedy for the malady if taken consecutively for few days.Thanks for the posting.

    ReplyDelete

 
Top