டயட், உடற்பயிற்சி, உண்ணா நோம்பு என பல வகைகளில் உடல் எடையை குறைக்க நாம் முயற்சி செய்கிறோம். நம் உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரைவதனால் தான் நமது உடல் எடை குறைகிறது என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், அந்த கொழுப்பு எப்படி நம் உடலை விட்டு வெளியேறுகிறது என்று எப்போதாவது யோசனை செய்திருக்கிறீர்களா??
சமீபத்தில் நடத்தப்பட ஓர் அறிவியல் ஆய்வில், மனித உடலில் இருந்து எந்த வகையில் கொழுப்பு கரைந்து வெளியேறுகிறது என்று ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்….
கொழுப்பு, எனர்ஜியாக மாறி வெளியேறுவது இல்லை
பெரும்பாலும் நாம், கொழுப்பு எனர்ஜியாக அல்லது எரிக்கப்பட்டு வெளியேறுகிறது என்று தான் நம்புகிறோம். ஆனால், அவ்வாறான நிகழ்வின் காரணமாக கொழுப்பு வெளியேறுவது இல்லை.
கொழுப்பு எப்படி உருவாகிறது
உண்மையில், உணவாக உட்கொள்ளப்படும் அதிகப்படியான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் தான் கொழுப்பாக மாறுகிறது. குறிப்பாக இதை ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகள் (triglyceride molecules) என்று கூறுகிறார்கள். இதில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்ற மூன்று மூலக்கூறுகள் இருக்கின்றன.
ஆக்ஸிடேஷன் செயல்பாடு
உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது ட்ரைகிளிசரைடு மூலக்கூறுகளாக கட்டமைந்து இருக்கும் இந்த ப்ளாக்குகள் உடைந்து வெளியேறுகிறது, இந்த செயல்பாடை ஆக்ஸிடேஷன் என்று கூறுகிறார்கள்.
ட்ரைகிளிசரைடு எப்படி எரிக்கப்படுகிறது
ட்ரைகிளிசரைடு எரிக்கப்படும் செயல்பாட்டில், நிறைய ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை, CO2 மற்றும் H2O-களை கழிவாக தயாரிக்க எடுத்துக்கொள்கிறது.
10 கிலோ எடை குறைக்க
பத்து கிலோ எடையிலான கொழுப்பை எரிக்க, 29 கிலோ ஆக்ஸிஜனை நீங்கள் மூச்சாக உள் இழுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் நடக்கும் கொழுப்பை எரிக்கும் இரசாயன மாற்ற செயல்பாட்டில் 28 கிலோ CO2 மற்றும் 11 கிலோ தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டு கூறியிருக்கிறார்கள்.
CO2-வாக வெளியேறும் கொழுப்பு
எடை குறைப்பு செயல்பாட்டில் 84% கொழுப்பு CO2-வாக தான் வெளியேறுகிறது. இது நுரையீரல் வழியாக வெளியேறுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள 16% கொழுப்பு
மீதமுள்ள 16% கொழுப்பு உடலில் இருந்து நீராக வெளியேறுகிறது. இந்த ஆய்வின் மூலமாக, உடல் எடை குறிப்பில் முக்கியமாக செயல்படும் உடல் உறுப்பு நுரையீரல் என்று கண்டறிந்துள்ளனர்.
நீராக வெளியேறும் கொழுப்பு
உடல் எடை குறைப்பு செயல்பாட்டில், சிறுநீராகவும், வியர்வையாகவும், கண்ணீராகவும், மற்ற உடல் திரவாமாகவும் கொழுப்பு நீர் வடிவில் வெளியேறுகிறது என கண்டறிந்துள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம்Herbal-Fatdworldforum.com
ஆஸ்திரேலியாவில் இருக்கும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டுள்ளது. ரூபன் மீர்மேன் மற்றும் ஆண்ட்ரூ பிரவுன் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார்கள்.
ஜாக்கிங் சிறந்த பயிற்சி
உடல் எடைக் குறைப்பதற்கு சிறந்த பயிற்சி ஜாக்கிங், ரன்னிங் தான் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த பயிற்சியில் ஈடுபடும் போது தான் நாம் அதிகமாக சுவாசிக்க முடியும், மற்றும் நுரையீரல் நிரம்ப மூச்சை உள்ளிழுத்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்க

Post a Comment

 
Top